Tuesday 8 November 2016

கீச்சுக்கள்!

ஒரு தொலைக்காட்சியில் குஷ்பு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்துக் கொண்டிருந்தார், தினந்தோறும் குடித்து விட்டு அடித்து உதைக்கும் கணவனை வெறுத்து அவளின் மூன்று குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு மனைவி அவள் பிறந்த ஊருக்கு சென்று விட்டதால், குழந்தைகள் தங்கள் அம்மாவை மீட்டுத் தரும்படி கோரிக்கை! நிகழ்ச்சியில் தெரிவது ஒரு குடும்பத்தின் அவல நிலை, பல குடும்பங்களின் நிலை குடியால் எப்படி எப்படியோ இருக்கலாம், குழந்தைகள் தான் வருங்காலம், வருங்காலம் கலங்கி கதறுகிறது, நிகழ்காலம் குடித்துச் சுகிக்கிறது!
குடிமகன்களுக்காக, வருமானத்துக்காக நாடெங்கும் சாராயத்தின் கிளைகள், அதே குடியால், கணவனிடம் குழந்தைகளை மட்டும் தவிக்க விட்டு விட்டு, அம்மா விலகல்!
அம்மாடா!

------------------------

இஸ்லாமிய ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்து தூக்கி விட்டது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அமெரிக்கா, பாகிஸ்தானின் இந்திய உளவுவேலைகளுக்குத் துணைபுரிந்தது இந்து மதத்தைப் பின்பற்றும் ஆட்கள்...இப்படி வெளிவரும் செய்திகளைப் படித்தாவது புரிந்துக்கொள்ளுங்கள், தீவிரவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் சாமியார்களுக்குமே கூட "மதமும் கடவுளும்" வெறும் கண்துடைப்பு நாடகமே, அவரவர் லாபத்திற்கு, பணத்திற்கு, பதவிக்கு, "மக்களின் உயிர்" வேண்டும், அதற்கு மதச்சாயம் பூசி, மக்களைப் பிளவுபடுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி, கொன்று குவிக்கும் வேலைகளைத்தான் செய்கின்றனர் அத்தனை அரசியல்வாதிகளும், மனிதம் இல்லாத தீவிரவாதிகளும்

------------------------------

அதிகபட்ச சகிப்புத் தன்மை உள்ளவரே இந்தியத் திருநாட்டில் வாழ முடியும்!
எல்லாம் சகித்துக் கடப்பதற்குத்தான் டாஸ்மாக் கடைகளும், பொழுதுபோக்குத் திரைப்படங்களும், அதைச் சார்ந்த கிசுகிசுச் செய்திகளும்!

--------------------


விழுந்து விழுந்துக் கடவுளைக் கும்பிடும் நேரம், வாங்கும் ஊதியத்திற்கு நேர்மையாகக் கடமையாற்றலாம்!
குறிப்பு: இது அரசியல் பதிவல்ல!

--------------------------------
அதீத சகிப்புத்தன்மையுடன் இருக்கும் தமிழக மக்களுக்குத்தான் நியாயமாய் அமைதிக்கான நோபல் பரிசை தர வேண்டும்!
----------------------------------
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!