1. ஆழ்வார்பேட்டைப் பாலத்தில் என்னுடைய இடப்புறத்தில் சென்ற கார் ஒன்று
மயிரிழையில் அதை முந்திச் செல்ல முயன்ற மற்றுமொரு காரிடம் இருந்து
ஓட்டுனரின் சாமர்த்தியத்தில் தப்பியது, யாருடைய வண்டி என்று பார்த்தப்போது,
அது ஒரு வழக்கறிஞரின் வண்டி என்று தெரிந்தது ....
2. இரவு பன்னிரண்டு மணியளவில், ஒரு கார் மட்டுமே போகக்கூடிய ஒரு பாலத்தின் கீழிருந்த சாலையில், விடாது ஹார்ன் அடித்துக் கொண்டு என் காரின் பின்னே ஒரு மிகப்பெரிய XUV வந்தது, நெடுஞ்சாலையில் நகர்ந்தபோது அது ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் வண்டி என்று தெரிந்தது

3. சாலை முழுதும் உயர்ரக வண்டிகள் அணிவகுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்தது, அங்கே கட்சி அலுவலகம் இருந்தது.....
4. அலுவல் விஷயமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது, சாலையில் அவருடைய வாகனத்தை "நோ பார்க்கிங்" என்ற அறிவிப்புப் பலகையின் அருகில் நிறுத்தினார், என்ன இங்கே என்றதற்கு, என் வண்டியில் பாருங்க "G" என்று இருக்கு, அரசாங்க வண்டி, யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்றார்
இ.அ.நீ. யா.:
காலை என்றாலும் இரவு என்றாலும், பல அரசு உயர் அதிகாரிகளும், சில வழக்கறிஞர்களும், பல அரசியல்வாதிகளும், ஒரு சில கட்சிகளும், நொடிகளைக் கூட வீணாக்காமல் மக்கள் பணியாற்ற சாலையில் செல்கிறார்கள், தேர்தல் வரும்போது அவர்கள் மெதுவாய் வந்து நம்மைச் சந்திப்பார்கள், அதுவரை சாலையில் ஒதுங்கி நின்று நம் உயிரை காப்பாற்றிக் கொள்வோமாக!!!

No comments:
Post a Comment