Saturday, 21 November 2015

யாரோ சொன்னார்கள்!

இத்தனை கோடி
அத்தனை கோடியில் தூர்வாரி,
பின் பல ஆயிரம் கோடியில்
நிவாரண ரொட்டித் தந்து,

பளிச் பளிச்செனப் புகைப்படங்களுக்குப்
போஸ் கொடுத்து,

ரோடு போட சொந்தகாரனுக்குக்
காண்ட்ராக்ட் தந்து,
பின் மின்சாரத்திற்கு, கேபிள் பதிப்பதற்குக்
குழிகளை வெட்டி,
அதை மூட
மறுபடியும் வழித் தேடி,

ஊர்களை வெள்ளக் காடாக்கி
கல்விக்கூடங்களைச் சீர்திருத்தாமல்
ஒவ்வொன்றாய் மூடி
 போதைக்கு மட்டும் முன்னேற்றப் பாதையில்
இலக்குகள் வைத்து

மக்களின் கேள்விகளுகெல்லாம்
எதிர்கேள்விகள் மட்டும் கேட்டு
தேர்தலில் மலிவுவிலை
இலவசங்களைத் தந்து

எல்லா வன்முறைகளுக்கும்
ஊழல்களுக்கும் முடிவேயில்லாமல்
மீண்டும் மீண்டும் அரசியல் நாடகம்
நடத்துகின்றனர் தலைவர்கள்

யாரோ சொன்னார்கள் சுதந்திர இந்தியாவாகி
அறுபத்தெட்டு வருடங்கள் ஆகிறதென்று!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!