Friday 6 November 2015

கீச்சுக்கள்!

குடி என்பது குடிகாரர்களின் மனநலத்துக்கு (தன்னை மறந்து, குடும்பத்தை மறந்து, அட ஆடை கூட மறந்துபோவதால் ) நல்லது என்பதால் குடி நல்லது, நீங்கள் உழைத்து வாங்கிக்கொடுக்க முடியாமல் அரசே இலவசமாய் மிக்ஸி, பேன் போன்ற உபகரணங்களைத் தந்துவிடுவதால்................. அப்புறம்...ஆமாம் குடி நல்லது!
குடித்துவிட்டுச் சொர்க்கத்தில் வாழ்வீர்களாக!
இப்படிக்கு உண்மையான குடிமகள் (குடியுரிமைச் சட்டப்படி மட்டும்)!!!
இதுல ஏதும் தப்பு இல்லையே ?
----------------------------------------------------------------------------------------------------------------------
தேய்மானம் என்பது பொருட்களில் மட்டுமல்ல, நம்முடையே உபயோகத்திற்கென்றே கையாளும்போது மனிதர்களிடமும் வருவது!
‪#‎நுகர்வோர்_கலாச்சாரம்‬! ‪#‎Consumerism‬
‪#‎Depreciation‬

-----------------------------------------------------------------------------------------------------------------------
முக்கால்வாசி பேர் போதையிலும், கால்வாசி பேர் பயத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் நாட்டில்
இலவசங்கள் எதுவும் இலவசங்கள் இல்லை ....எல்லாம் நம் காசுதான்!
இது இந்திய மக்களுக்கு புரியும் போது, நாடு வல்லரசு ஆகிவிடும்!


------------------------------------------------------------------------------------------------------------------------
குடிக்குற தண்ணிய உறிஞ்சி அதில் சக்கரையையும், கலரையும் வாயுவையும் கலந்து உள்ளுறுப்புக்களை மெதுவா அழிக்குற ஒரு பானம் உங்களுக்கு தேவையா? சாராயத்தை கொண்டாடுற நாட்டுல எந்த சாக்கடைத் தண்ணியும் உங்களுக்கு அமிர்தம்தான்!
குளிர் சாதன பெட்டியில் வாங்கி அடுக்கி வெச்சு குழந்தைகளுக்கும் கொடுக்குற கொடுமையை என்ன சொல்றது?  

------------------------------------------------------------------------------------------------------------
Discount the hatred,
Count the blessings!
Life has its own meaning and it's raining!
----------------------------------------------------------------------------------------------------------------
It's not the muscle or money power always, it's the will power that drives all the muscles to work and money follows later towards any goal!

ஆட்சிக்கு முன் நீங்கள் மக்களைச் சந்திப்பதைக் காட்டிலும்,
ஆட்சியேற்றப் பின்னரும், உங்களை, எளிய மக்களும் எளிதில் சந்திக்கக்கூடிய சாத்திய கூறுகளை, நீங்கள் ஏற்படுத்தினால் மட்டுமே வாழும் ஜனநாயகம்!
அதுவரை முடிவதுமில்லை, விடிவதுமில்லை, மாற்றமுமில்லை முன்னேற்றமுமில்லை, மக்களின் முதல்வரோ தலைவரோ மக்களுக்கு இல்லை!


பதவி என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தியைப் போன்றது!



No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!