Tuesday, 18 September 2012

ஜன(பண)நாயகம்

நான் ஆஸ்திரேலியாவில் melbourne நகரில் தூங்கி கொண்டிருக்கையில் எனக்கு இந்த கனவு வந்தது...சத்தியமாய் இது எங்கே நடக்கிறது என்றே எனக்கு தெரியாது...இது முழுக்க முழுக்க என் கனவும் கற்பனையுமே......உங்களுக்கு தெரிந்தால் உங்களோடையே வைத்து கொள்ளுங்கள்................
----------------------------------------------------------------------------

அரசே, இந்திய மக்கள் குடிப்பதற்கு கஞ்சி கூட இல்லாமல்
கஷ்டப்படுகி

றார்கள்....
அப்படியா? கஞ்சி இல்லை என்றால் என்ன, அவர்களை பிரட் பட்டர் சாப்பிட சொல்லு....

இது நடந்தது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராஜ்யத்தில்...
------------------------------------------------------------------------------------------
இது நடப்பது சத்தியமாய் எங்கே என்று எனக்கு தெரியாது

மக்கள்: ஐயா போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகிவிட்டது....
யாரோ: சரி, மரத்தை எல்லாம் வெட்டி சாலை போடு...அப்படியே நம்ம ஆளா பாத்து கான்றக்ட் போடு....

மக்கள்: ஐயா விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை.....
யாரோ: அப்படியா? பிளாட் போட்டு வித்துபோடு...அதுலே நல்ல எடமா பாத்து நம்ம பசங்க பேர்ல வளைச்சு போடு....

மக்கள்: ஐயா எங்களுக்கு குடிக்க கஞ்சிக்கே வழியில்லை...
யாரோ: அதுதான் அங்கே அங்கே டாஸ்மாக் கடை திறந்து வச்சிருகோமே...சரக்கு அடிச்சுட்டு சந்தோசமா இருங்க.....எங்க கல்லவா கட்டனும் இல்ல?

மக்கள்: ஐயா தமிழர்களை வதைக்கிறார்கள்...நாம் போராட்டம் நடத்த வேண்டும்...
யாரோ: சரி நாளைக்கு ஆப்டர் டிபன் பெபூர் லஞ்ச் ஒரு போராட்டம் நடத்துவோம்...பிறகு கடிதம் எழுதுவோம்...அப்புறம் ஒரு தீர்மானம் போடுவோம்...பிறகு கடிதம் எழுதுவோம்....பிறகு கருப்பு கோடி காட்டுவோம்...பிறகு அவர்கள் வந்தால் கூண்டில் அடைப்போம்..பிறகு ஒரு கடிதம் எழுதுவோம்...பிறகு ஒரு அறிக்கை விடுவோம்....பிறகு ஒரு புத்தகம் எழுதுவோம்...ஆவ்வ்...அட போங்கையா வேலைய பாத்துகிட்டு.....

மக்கள்: ஐயா கூடங்குளம் வேண்டவே வேண்டாம்...
யாரோ: எலேய்...நம்ம நாராயணசுவாமி ஐயா சொல்லுறாக அது சிவகாசி மாதிரி கிடையாதுன்னு (அமாங்க கரி கூட மிஞ்சாது)..நம்ம விஞ்ஞானி ஐயா சொல்லுறாக எதுவுமே நடக்காதுன்னு.....(அமாங்க எதுனா நடந்த நாம மொகத்தில் ஈர துணிய கட்டிக்கிட்டு உள்ளிய இருக்கணுமாம் இல்ல ஊர விட்டு ஒடனுமாம்...)....கரண்ட் வேணுமா....உசுரு வேணுமா...அட போங்கையா இன்னும் இருபது நாளில் உங்க எல்லாருக்கும் கரண்ட் கிடைச்சிடும்.....போத்திக்கிட்டு மொத்தமா தூங்குங்க ங்க ங்க ங்க....

மக்கள்: ஐயா, குழந்தை தொழிலாளர்களை தடுத்து கட்டாய கல்வி கொடுக்க வேண்டும்....
யாரோ: கவலை படாதேலே....எனக்கு ஓட்டு போடு..கொஞ்ச நாள்ள நாம பெரிய ஸ்கூல கட்டுவோம், அப்புறம் காலேஜ் கட்டுவோம்....உன் புள்ளைய கொஞ்ச பணத்தை கட்டி அங்கே சேத்து விடு.....நாமதன்லே எல்லாருக்கும் கல்வி கண்ணே திறந்துவிடுவோம்....(எலேய் நம்ம புள்ளைகளே ஊட்டி கோன்வேன்டுலே சேத்தாச்சா???)

மக்கள்: ஐயா நாட்டுலே உணவு பொருள் எல்லாம் சேமிப்பு கிடங்கு இல்லாமல் வீணாகிறது...
யாரோ: அட பாவிகளா...அதுக்குதானே வால் மார்ட் கூப்பிடுறேன்..அவன் அழகா எல்லாம் பேக் பண்ணி தருவான்லே...கொஞ்சம் அதிகமா காசு போட்டு நம்ம பொருள தரமான பொருள மாத்தி தருவான்லே??? (எலேய் நமக்கு கமிஷன் எவ்வளவு தருவான் நு கேட்டு சொல்லு)

மக்கள்: ஐயா நாட்டுலே வறுமை தாண்டவமாடுகிறது....
யாரோ: அப்படியா எல்லாருக்கும் இலவசமாய் செல்போன் தரலாம் இதை பற்றி பேசி முடிவெடுக்க வசதியாய் இருக்கும்...(எந்த செல்போன், காண்ட்ராக்ட் போட்டாச்சா???)

நான்: ஐயோ ஐயோ இவ்வளவு நேரம் படிச்சிங்களா? சும்மா ஒரு கதை எழுதி பார்த்தேன் இதுக்கு கிளைமாக்ஸ் சே கிடையாதுங்க.....போய் வேலைய பாருங்க.....

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!