Tuesday 18 September 2012

காதல்

இதுதான் காதல் என்று
கனவில் திளைக்கிறோம்
கடந்து போன நாட்களை
நினைத்து அழுகிறோம்

முடிந்து போன நாட்கள்
முறிந்து போன உறவுகள்
கலைந்து போன கனவுகள்
எதில் வாழ்கிறது எண்ணங்கள்?

முன்னம் ஒரு காதல்
விடலைக் காதல், பின்னர்
ஒரு காதல் வசீகரக் காதல்
எல்லாம் தாண்டி வந்தது
பருவக் காதல் - கடைசியில்
நின்றது முதுமைக் காதல்!

கண்டு மகிழ்வதும் காதல்
பேசிப் பிரிவதும் காதல்
மனதில் பூட்டி மறைப்பதும் காதல்
போட்டியிட வைக்கும் காதல்
சாதிக்க வைக்கும் காதல்

இதுதான் காதல் என்று
பிதற்றி திரிகிறோம்
உண்மைக் காதலை
தேடி அலைகிறோம்

அரக்கனை புத்தனாக்கும் காதல்
அரசனை ஆண்டியாக்கும் காதல்
முள்ளில் தேனாய் வரும் காதல்
மலரில் மரணமாய் மாறும் காதல்

இவைதான் காதல் என்று
வரையறுத்து வாழ்கிறோம்
இவை எனது என்று
எல்லையிட்டு மடிகிறோம்!

எது காதல் என்று செய்தாலும்
பெறுவதும், தருவதும் குறிக்கோளாய் ஆனது!

குறிக்கோள் இல்லா காதல் பித்தனாக்கி போவதும்
இறை வேண்டும் காதல் சித்தனாக்கி போவதும்
இயல்பு என்று ஆனது, வாழ்க்கை மாறிப் போனது!

எதுதான் காதல் என்று
திரும்பி பார்க்கையில்..
அழுத குழந்தை - அடித்தவளிடேமே
வந்தது "அம்மா" என்று!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!