Tuesday 18 September 2012

சிந்தும் ரத்தம் எதுவானாலும் அது இந்திய ரத்தம்!


பிரச்னை எதுவானால் என்ன?
தந்திரங்கள், மந்திரங்கள் பல செய்து
மக்களை ஆக்குவோம் மந்தை கூட்டமாய்!

எண்ணிக்கை எதுவானால் என்ன?
மொழியால், இனத்தால், நிறத்தால்
மக்களை ஆக்குவோம் முட்டாள்களாய்!

ஒற்றுமையாய் இருந்தால் என்ன
அல்லா முருகர் பெருமாள் சிவன் கர்த்தர்
இன்னும் பல பெயர்கள் கொண்டு
மக்களை ஆக்குவோம் வெறியர்களாய்!

புரட்சி ஓங்கினால் என்ன
கூடங்குளமோ, முல்லை பெரியாரோ, எல்லை தகராறோ
உள்நாட்டு வன்முறையோ, வெளிநாட்டு பொருளாதார குற்றமோ
சிறியதோ பெரியதோ, எதுவானாலும்
இன்று பேசுவோம், நாளை துன்பப்படுவோம், பிறகு தூங்கி விடுவோம்
ஆமை ஒட்டினில் ஒடுங்கி கொள்வோம், காடு பற்றி எரியட்டும்!

சிந்தும் ரத்தம் எதுவானாலும் அது இந்திய ரத்தம்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!