Tuesday, 18 September 2012

இயற்கையின் குமுறல்

மரம் வெட்டி
மனை அமைத்தனர்
நீர் தடுத்து
நெருப்பு மூட்டினர்
மண்ணை விஷமாக்கி
மனிதனை மலடாக்கினர்

பூகம்பமாய் கதறினேன்
ஆழி வெள்ளமாய் அழுதேன்
ஆற்றுவார் சிலரே!


நீர் கொண்டு பகை வளர்த்தார்
நிலம் பகுத்து நலம் தொலைத்தார்
மரம் வெட்டி மழை குறைத்தார்
பொன் கண்டு கண் இழந்தார்
பணம் பெருக்க மனம் தொலைத்தார்
இறுதியில்
அணுவை பிளந்து அழிவை தேடினார்

நீர் தந்தேன்,
நிலம் தந்தேன்
வளம் தந்தேன்
ப்ரான வாயு தந்தேன்
மடி தந்த என்னிடம்
பல வழி கண்டு கொத்து கொத்தாய்
செத்து மடிவதென்ன?
இயற்கை வழி மறந்தே போனதென்ன?

இழந்ததை மறந்து, இருப்பதை
தொலைக்க இத்தனை வழிகளா?
அறிவியல் கண்டது அழிக்கும் சிந்தனைகளா?

வளம் அழித்து
நலம் தொலைத்தீர்
இனி வளம் காக்க
நானே வருவேன் நாளை
ஆழி வெள்ளமாக, பூகம்பமாக,
பெரு மழையாக....புரட்டி போடும்
வறட்சியாக....
என்றாவது ஒருநாள்
மானுடம் துளிர்க்கும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!