ஓடி கொண்டே இருக்கிறோம்
ஓய்வில்லாமல்
உழைத்து கொண்டே இருக்கிறோம்
உண்மை உணராமல்!
வன்முறையின் தாக்கம் எங்கும்
விஸ்வரூபமாய் - நம்
வீட்டில் கல் விழும் வரை நாம் காத்திருப்போம்!
கருவறையில் நம்மை காத்து
நம் வாழ்க்கைவுயரும் வரை தாழ்ந்து
ஓய்வில்லாமல்
உழைத்து கொண்டே இருக்கிறோம்
உண்மை உணராமல்!
வன்முறையின் தாக்கம் எங்கும்
விஸ்வரூபமாய் - நம்
வீட்டில் கல் விழும் வரை நாம் காத்திருப்போம்!
கருவறையில் நம்மை காத்து
நம் வாழ்க்கைவுயரும் வரை தாழ்ந்து
தன் கல்லறை வரை நம் நினைவுகளை
சுமக்கும் தாய் - இன்று இருப்பது
தனியறையில் அல்லது தனிமை சிறையில்
நம் காலம் வரும் வரை நாம் காத்திருப்போம்!
காக்காய் கடி கடித்து
இருப்பதை பகிர்ந்து
தோள் தட்டி அரவணைத்த நட்பு
நாள் பொழுதில் நிலைமை தாழ்ந்து போனால்
நமக்கென்ன வந்தது - அது அவன்/அவள் தலைஎழுத்து
நம் நிலை தாழும் வரை நாம் காத்திருப்போம்!
யாதும் வூரே யாவரும் கேளிர்
என்று சொல்லி வளர்த்தனர் பெரியோர்
இருந்தாலும் தமிழ் பேசும் மாநிலத்தின்
தண்ணீர் தேவை பற்றி கவலையில்லை
வெள்ளம் பெருக்கெடுத்து என் கடவுளின்
நாடு வெள்ளக் காடாய் மாறும் வரை நாம் காத்திருப்போம்
தண்ணீர் தந்தார், காற்றை தந்தார்
சூரிய ஒளியை தந்தார் - அதற்கு
மேலும் அறிவியல் அறிவை தந்தார்
ஆராயாமல் அணு உலை - காற்றோ நிலமோ
நீரோ மாசுபட்டால் என்ன, மக்கள் மாய்ந்து
மடிந்தால் என்ன?
அணு உலை வெடிக்கும் வரை நாம் காத்திருப்போம்!
நமக்கென்ன எனக்கேன்ன உனக்கென்ன
இந்த நிலையை கொண்டு வந்த காகிதத்தின் பலமென்ன?
நாளை உலகம் காகிதத்தின் உலகம்,
நம்பிக்கை கொண்டு நம் வாழ்வை மீட்டேடுப்போம் இனியாவது!

No comments:
Post a Comment