Tuesday, 18 September 2012

இயலாமை

டாஸ்மாக் கடையருகில்
பள்ளி வளாகம், குழந்தைகள்
இன்று படிக்கத்தான் செல்கிறார்கள்!

புதிய வணிக வளாகம்
புதிய மேம்பாலம், அடிக்கல் நாட்டினர்
அகற்றப்பட்டன குடிசைகளும், மனிதர்களும்!

நடைபாதையில் கடைகள்
சாலையோரம் வாகனங்கள்
தெருவினை வளைத்து கட்டிய வீடுகள்
நடுவில் நாங்களும் நாய்களும்!

கைநீட்டி காசு - கேட்பது
பிச்சை, கேட்பவர் எல்லோரும்;
இங்கே வாழ்கிறது சம தர்ம சமுதாயம்!

மரம் வெட்டி சாய்த்து,
சாலை விரிவுபடுத்தி - நடுவில்
வைத்தனர் தோட்டம் - அழகான
கருமை புகையாக எங்கும் - இதோ
எழில் மிகு நகரம்!

பட்டபகல் கொள்ளைகள்,
பழியுணர்ச்சி கொலைகள்
சுரண்டி தின்னும் முதலைகள்
மிரட்டியெடுக்கும் வன்முறை,
பாதுகாப்பு தரப்பட்டது மந்திரிகளுக்கு

நித்தம் நித்தம் இத்தனை காட்சிகள்
மனதினை அழுத்த, நாடினேன் மருத்துவரை
ரத்த அழுத்தம் குறைத்திட,
உப்பு குறைத்து உண்டிட - "எல்லாம்"
சரியாகும் என்றார் மருத்துவர்
அதுவே சரியென்று நினைக்கின்றேன் நானும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!