பெங்களூர், ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், மற்ற பிற
வடமாநிலங்களிலும், பெரும்பான்மையான எல்லா அரசு, தனியார் அலுவலகங்களிலும்,
வணிக இடங்களிலும், இந்தி இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் அவர்களின் தாய் மொழி
இருக்கும், இந்தி இருக்கும் இடத்தில் அவர்கள் மொழியும் அறிவிப்புப்
பலகைகளில் இருக்கும், தமிழகத்தின் தலைநகரில் இயங்கும் பல்வேறு வணிக
இடங்களில், தனியார் வங்கிகளின் மக்கள் புழங்கும் இடங்களில், இந்தியும்
ஆங்கிலமும் இருக்கிறதே தவிரத் தமிழ் என்பது இல்லை, இந்தி எதிர்ப்பை விட
நாம் தமிழ் ஒழிப்பு நிலைக்கே முதலில் வேதனைப் பட வேண்டும்!
பிற மாநிலங்களில் இந்தியை எதிர்க்கிறார்களோ இல்லையோ, தங்கள் மொழியைக் கட்டிக் காக்கிறார்கள், இங்கே தமிழன் ஆண்டாலும் சுரண்டல், தமிழர் அல்லாதவர் ஆண்டாலும் சுரண்டல்!
நமக்கு ஆங்கிலம் என்பது தமிழை மறப்பதற்கு அல்ல!

No comments:
Post a Comment