Saturday 20 April 2019

அன்பின் வடிவங்கள்


அலட்சியத்தில்
அன்பு
மெல்லச் சாகும்!
*****
இருப்பதை
கொட்டித் தீர்த்துவிடும்
மழையின் வேகத்தை
போல
சிலரின் அன்பு
காய்ந்து கிடக்கும்
கரட்டில்
போனால் போகட்டுமென்று
விழும் நீர்த்திவலைகளை
போல
சிலரின் அன்பு
*****
அம்மாவின்
அன்பை உணராதவன்
மிருகமாகிறான்
அல்லது
கிடைக்காததை
பிறருக்கு கொடுக்கும்
தாயுமானவாகிறான்
*******
பெண்மை
அழகு நிறைந்தது
தாய்மை
எப்போதும்
அன்பு நிறைந்தது
*******
அன்பும்
நேசமும்
யாருக்கு
மறுக்கப்படுகிறதோ
அவர்களிடமிருந்தே
உலகிற்கு மீண்டும்
கிடைக்கிறது
பெரும்பாலும்!
*******
தேவையிருக்கும் போதும்
நேரமிருக்கும் போதும்
வருவதல்ல அன்பு
அன்பின் தேவைக்கு
நேரம் காரணமும்
பொருட்டல்ல!
*******
அன்பென்பது
எப்போதும்
அன்பாய் இருப்பது
*******
செல்வந்தர்கள்
தேடும் அன்பு
வறியவர்களிடத்திலே
நிறைந்திருக்கிறது
வாழ்வின் அழகிய
முரணாக!
*******
நிறைந்த செல்வம்
கிடைத்தபின்
தானம்
செய்வேனென்பதும்
எல்லாம் கிடைத்தபின்
நேரம் கிடைக்கும்போது
அன்பு செய்வேனென்பதும்
வெற்று அரசு
அறிக்கைகள் போல
நிறைவேற்றப்படுவதில்லை!
*******
அன்பு
நிறைந்தவர்களுக்கு
மரணம்
முடிவல்ல!
*******
அன்பாய் இரு
அன்பை
எதிர்ப்பார்க்காதே
என்பதுதான்
நவீன அன்பின்
வடிவம்!
*******
அன்பொரு
அட்சயப்பாத்திரம்
*******
எல்லா மொழிகளிலும்
தாய்மையும்
அன்பும்
குணம் மாறுவதில்லை
******
எழுதி எழுதி ரசிக்கப்படும்
அன்பு
பகிரப்படாமல்
உறங்குகிறது
கைபேசிகளில்!

#அன்பு
 
August 1 2018


Image may contain: flower

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!