Saturday 20 April 2019

மக்கிப்போகும் மனித இனம்


யாரோ வருகிறார்கள்
யாரோ போகிறார்கள்
வேடிக்கைப் பார்க்கிறது
காற்று

யாரோ நடுகிறார்கள்
யாரோ சாய்க்கிறார்கள்
புத்தனாய் இருக்கிறது
மரம்

யாரோ சேமிக்கிறார்கள்
யாரோ வீணடிக்கிறார்கள்
உறைந்துக் கொண்டிருக்கிறது
நீர்

யாரோ தொழுகிறார்கள்
யாரோ சிதைக்கிறார்கள்
தாங்கிக் கொண்டிருக்கிறது
பூமி

யாரோ பாதுகாக்கிறார்கள்
யாரோ குடைந்தெடுக்கிறார்கள்
கரைந்துக் கொண்டிருக்கிறது
மலை

யாரோ ஆராய்கிறார்கள்
யாரோ வியக்கிறார்கள்
மௌனமாய் இருக்கிறது
வானம்

யாரோ உருவாக்குகிறார்கள்
யாரோ அழிக்கிறார்கள்
சலனமில்லாமல் வீற்றிருக்கிறது
வனம்

யாரோ போராடுகிறார்கள்
யாரோ சுரண்டுகிறார்கள்
குப்புறக் கவிழ்ந்து கிடக்கிறது
நீதி

யாரோ வாழ யாரோ சாகிறார்கள்
யாரோ சாக யாரோ வாழ்கிறார்கள்
மக்கிப்போய் கொண்டிருக்கிறது
மனித இனம்!




Image may contain: one or more people

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!