Saturday 20 April 2019

மரமும் மனிதனும்

அந்த நிழலில்
விளையாடினான்
அந்தத் தென்றலில்
காதல் செய்தான்
அதன் வழியே
பயணம் போனான்
எனினும்
எப்போதும் அவன்
அதை ஏறிட்டும்
பார்க்கவில்லை
விரலால் தீண்டி
நன்றியும் கூறவில்லை
சட்டென்று
ஒருநாளில்
மொத்தமாய்
வெட்டிக் குதறப்பட்டு
அது விலக்கப்பட
அந்த வெறுமை
அப்போதுதான்
அவனை சுட்டது!

அந்த நெடுஞ்சாலையில்
நிழலுக்காய் ஏங்கி
கையில் ஒரு
விதையை
வைத்துக்கொண்டு
நின்றவனிடம்
அந்த விதையும்
கூட எதையும்
எதிர்ப்பார்க்கஈமல்
கொஞ்சம்
முளைவிட்டு
எட்டிப்பார்க்கிறது
தேர்ந்த
ஞானியாக!


Image may contain: outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!