Saturday, 20 April 2019

ஓர் அடிமைத்தேசம்

1. பெரு வெள்ளமொன்று வந்தது, மக்கள் உறக்கத்திலேயே மூழ்கி இறந்தார்கள், அப்போதும் யார் செத்தால் என்ன என்று இதே மக்கள் ஓட்டுப்போட்டார்கள்,

2. நீட்டினால் உரிமைகள் இழந்து, பிணங்கள் விழுந்தபோது, “நீட் பொணம்” விழுந்திடுச்சா என்று கேலி பேசினார்கள்,

3. இப்போது சுடப்பட்டு சொந்தங்கள் இறந்தபோது, “கடைசிவரைக்கும் சுட்டு சாகடிங்க நாய்கள” என்று தைரியமாக பதிவிடுகிறார்கள்,

4. ஆட்சியாளர்கள் மாறுவார்கள் அதிகாரிகள் அப்படியேதான் இருப்பார்கள், நாளை இதே மக்களிடையேதான் நடமாட வேண்டும் என்று தெரிந்தும், கண்டபடி சுட்டுத்தள்ளுகிறார்கள், காவலர்கள்

5. தலைமைச்செயலகம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது, இருந்தாலும் துணை ராணுவம் வரட்டும் என்று சென்னையிலிருந்து ஆட்டம் ஆடுகிறார் தலைமைச்செயலர்.

6. தன்னை விசாரிக்க தானே விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடுகிறார் முதல்வர். அதுவும் வெற்றிகரமாக ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வரை விடுவித்தவரை

7. இத்தனை கலவரங்கள் வேறு ஆட்சியில் நடந்திருந்தால் ஆட்சிக்கலைக்கப்பட்டிருக்கும், இங்கே தனியார் ஆலை இயங்க தூத்துக்குடியை மொத்தமாக கொன்றாவது பாதுகாப்பு தருவோம் என்கிறது அரசு

8. யார் செத்தால் என்ன “பேஷா சாவட்டும்” என்று நரித்தனம் ஊறிய கும்பல் பதிவிடுகிறது, ஆங்கிலேயே காலத்தில் இந்த நரிகளால் முன்னோர்கள் என்ன பாடுப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிகிறது, மொத்தமாய் காட்சிகளைத் திரித்து, இதே மக்களிடையே வாழ்ந்துக்கொண்டு சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன, ஐயோ பாவம் அப்பாவி காவலர்கள் என்று ஊடகங்கள் செய்தி திரிக்கின்றன

9. செத்த கணக்கு என்ன, காயக் கணக்கு என்ன, வந்து வரிசையாய் காசு வாங்கிக்க என்று சொல்வது எல்லாம் ஆவணத்தின் உச்சம்

10. அத்தனையும் செய்துவிட்டு, வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்க வருவார்கள், “அட நம்ம சாதிக்காரன், எவ்வளவு சாமர்த்தியமா ஆட்சி செஞ்சு இருக்கான், எத்தனை கொலைகள் “, என்று ஒரு கண்மூடித்தனமான சாதிப்பாசம் இரத்த வாசனையை இரசித்துக்கொண்டே ஓட்டுப்போடும், இன்னொரு கும்பல் டோக்கனோட தன் அன்றாட பாடுகளுக்காய் பிச்சையெடுக்கும், “பேஷா செஞ்சேள் போங்கோ”, என்று ஒரு கும்பல் இரத்தம் தொய்ந்த தாமரைகளை முகர்ந்து ஆனந்தமடையும், மொத்தத்தில் இது வெறும் அறச்சீற்றத்தாலும், உணர்ச்சியை “சாராயத்தாலும்” ஆற்றிக்கொள்ளும் ஓர் அடிமைத்தேசம், அப்படித்தான் நினைக்கிறார்கள் ஆட்சியும், அதிகாரமும், அரசுப்பதவியும் அடைந்தவர்கள்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...