Saturday 20 April 2019

நிவாரணம்

சில ரூபாய் நோட்டுகளில்,
மரணங்கள்
மரணித்துப்போகின்றன
மனிதமும்
தற்கொலைச்
செய்துகொள்கிறது!
கரைபடாத
வெள்ளை வேட்டிகளில்
காக்கி கூலிப்படையோடு
கொலைகாரர்கள்
உலா வருகிறார்கள்
உணர்ச்சி செத்துப்போய்
ஒரு கூட்டம்
ஒதுங்கி இருக்க
உயிர்களை விட்டு
சில சடலங்கள்
சிதறி கிடக்க
போராட்டங்களையும்
மரணங்களையும்
ஒரு செம்மறியாட்டுக்கூட்டம்
கேலி பேசித்
திரிகிறது
வெள்ளை வேட்டி
கசாப்புக்காரன்
செம்மறியாடுகளின்
தலைகோதுகிறான்
பின்னே
மிச்ச சதைகளுக்காக
நரிகள்
காத்துக் கிடக்கின்றது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!