Saturday 20 April 2019

வாழ்க்கையின் மொழி

மௌனமென்பது
வேதனையின்
மொழியாகும்போது
துக்கம் மறைத்து
ஆர்ப்பரிக்கும்
வார்த்தைகளெல்லாம்
போராட்டத்தின்
மொழியாகும்
போராட்டமோ
வேதனையோ
வெற்றியோ
“ம்ம்” என்ற வார்த்தையில்
உதடுகளின்
ஒற்றைப்புன்னகையில்
அத்தனையையும்
கடந்துவிடுவதுதான்
வாழ்க்கையின் மொழி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!